"கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் சுமார் 221 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடக்கி வைத்து, 54 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், அரியலூர் மாவட்டத்தில் எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்களாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், அரியலூர் மற்றும் பெரம்பலூரில் புதை படிம பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அப்போது அறிவித்தார்.
Comments